கனல்கண்ணன் வெறும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்தான், ஆனால் பெரியார் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர் என தீக்கதிர் ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
கனல்கண்ணன் வெறும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்தான், ஆனால் பெரியார் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர் என தீக்கதிர் ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கம் கூறியுள்ளார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைதாகி சிறையிலுள்ள நிலையில் மதுக்கூர் ராமலிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்துக்கள் உரிமைப் மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி மதுரவாயல் அருகே நடைபெற்றது. அதில் அந்த அமைப்பின் மாநில கலைபண்பாட்டு பிரிவு செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர், ஆனால கோவில் வாசலில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது, அந்த சிலையின் கீழ் கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி, கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று எழுதப்பட்டிருக்கிறது, நான் சொல்கிறேன் அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என ஆக்ரோஷமாக பேசினார்.
இதையும் படியுங்கள்: ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஓவார் பேச்சு.. 8 வழி சாலையில் மாட்டிய எ.வ வேலு.. விழுந்தடித்து கொடுத்த விளக்கம்.
அவரின் பேச்சு சமூகவலைதளத்தில் வைரலானது, பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கனல் கண்ணன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது, இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கனல்கண்ணன் பேசியுள்ளார் என்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது, புகாரைப் பெற்ற சைபர் கிரைம் போலீசார் அவர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதற்கான வழக்கு பதிவு செய்தனர், இதற்கிடையில் கைதுக்கு அஞ்சி கனல்கண்ணன் தலைமறைவானார்.
இதையும் படியுங்கள்: முதல்வரே, விருப்பம் இருந்தால் கொழுக்கட்டை வைத்து கொண்டாடுங்கள்.. இல்ல ஒரு வாழ்த்தாவது சொல்லுங்கள்: L.முருகன்.
நீதிமன்றத்தின் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்தார், ஆனால் அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து புதுச்சேரியில் பதுங்கி இருந்த கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறுகு இரண்டு முறை அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார், ஆனால் இரண்டு முறையும் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. ஆனாலும் கனல் கண்ணன் தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை, தன்னை கைது செய்த காவல்துறை ஏன் கோவில் வாசலில் அந்த சிலையை வைத்தவர்கள் மீது வழக்கு பதியவில்லை என ஜாமின் மனுவில் கூறியுள்ளார்.
கைதாகியும் திருந்தாத கனல்கண்ணன் என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீக்கதிர் நாளிதழின் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கம், கனல் கண்ணனை கிண்டலடித்து பேசியுள்ளார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாள் படுத்திருக்கிறார், அதில் கூட சில புராணகர்கள் அவர் புரண்டு படுத்தால் உலகமே அழிந்து விடும் என்று கூறுகின்றனர், எனக்கு இருக்கிற கவலை எல்லாம், தூக்கக்கலக்கத்தில் அவர் புரண்டு படுத்து விடக்கூடாது என்பதுதான்.
ஸ்ரீரங்கத்தில் இந்த நின்று பார்த்தாலும் அந்த ராஜகோபுரம் தெரியும். அதன் எதிரே ரொம்ப அடக்கமாக அய்யா பெரியார் அமர்ந்திருக்கிறார், ஆனால் எதிரிகளுக்கு ராஜகோபுரம் தெரியவில்லை, எதுவுமே செய்யாமல் அடக்கமாக இருக்கிற பெரியார்தான் அவர்களுக்கு உறுத்துகிறார். பெருமாள் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பெரியார், ஆனால் அதைகூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை, அதிலும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் அளவுக்கு அதிகமாக பொங்கி இருக்கிறார். அவர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்தான், ஆனால் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்.
பெரியார்தான் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர், அவர் சந்திக்காத போர்க்களங்களா? அவர் நடத்தாத படை வரிசையா? சினிமாவைப் போல டிஷூம் சண்டை போடுபவர் அல்ல அவர், சனாதனத்துக்கு எதிரா