
கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிப்பாடு நடத்தி வருகின்றனர். மேலும் பிள்ளையார்பட்டி, மலைக்கோட்டை உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன.
மேலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் இன்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செயத வண்ணம் உள்ளனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சசிகலா இன்று தனது வீட்டில் சாமி தரிசனம் செய்த, வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து கடவுள்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:அப்போது நீங்க தான் சொன்னீங்க.. இப்போது ஒரு கையெழுத்து போட்டா போதும்.. செய்வாரா ஸ்டாலின்..? அன்புமணி கோரிக்கை..
முன்னதாக அவர் வெளியிட்ட வாழ்த்துக் குறிப்பில்,” வினை தீர்க்கும் ஆனைமுகன், முழு முதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.எந்த ஒரு செயலை தொடங்கினாலும், அதை வெற்றியுடன் செய்து முடிக்க முதலில் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு ஆரம்பிக்கும்போது அந்த செயல் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு அனைவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று, அனைவரும் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ அரளி மலர் மாலைகள் அணிவித்து கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து பக்தியோடு வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்
மேலும் படிக்க:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்த அம்மா உணவகம்.. மூடுவிழா நடத்தும் சென்னை மாநகராட்சி - மக்கள் எதிர்ப்பு!
சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல ஞானமுதல்வனை இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மனமுருக வணங்கி, சதுர்த்தி நாயகனின் அருளைப் பெற்று அனைவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமையட்டும்; சகோதரத்துவம், மனிதநேயம் தழைக்கட்டும் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும், நாடெங்கும் துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும்;
நோய் நொடியற்ற ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்வு எந்நாளும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்" என கூறியுள்ளார்.
மேலும் படிக்க:8 வழிச்சாலையில் நாடகம்.? மக்களிடம் பகிரங்கமாக சொல்லுங்க... ஸ்டாலினை ரவுண்டு கட்டும் அண்ணாமலை.