ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஓவார் பேச்சு.. 8 வழி சாலையில் மாட்டிய எ.வ வேலு.. விழுந்தடித்து கொடுத்த விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2022, 3:20 PM IST
Highlights

எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா வேலு விளக்கம் அளித்துள்ளார். எட்டு வழி சாலை திட்டம் வேண்டும் என்று தான் எந்த இடத்திலும் பேசவில்லை என்றும், தான் பேசியது திரித்துக் கூறப் படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா வேலு விளக்கம் அளித்துள்ளார். எட்டு வழி சாலை திட்டம் வேண்டும் என்று தான் எந்த இடத்திலும் பேசவில்லை என்றும், தான் பேசியது திரித்துக் கூறப் படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய பாஜக அரசால் அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது தான் சேலம் எட்டு வழி சாலை திட்டம், இத்திட்டத்தை கொண்டுவர அதிமுக தலைமையிலான அரசு எத்தனையோ முறச்சிகளை எடுத்தது, ஆனால் இத்திட்டம் கொண்டு வந்தால் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும், விவசாயத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வர நேரிடும் எனக்கூறி பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படியுங்கள்: முதல்வரே, விருப்பம் இருந்தால் கொழுக்கட்டை வைத்து கொண்டாடுங்கள்.. இல்ல ஒரு வாழ்த்தாவது சொல்லுங்கள்: L.முருகன்.

ஆங்காங்கே அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது, எடப்பாடி பழனிச்சாமி கமிஷனுக்காக இத்திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியது, திமுக இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது, அதனாலேயே கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் அதிகளவில் வாக்களித்தனர். அதுமட்டுமின்றி கடந்த சட்டமன்ற தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக திமுக ஆகிய எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்ப்போம் என தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது.

இதையும் படியுங்கள்: அய்யோ.. தலித் மக்கள் படுகொலை, தலித் பெண்கள் கற்பழிப்பு தொடர்கிறது.. ஸ்டாலின் அரசை எச்சரித்த திருமாவளவன்.

இத்தனையும்  திமுக கூறிவந்த நிலையில் சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட கூறவே இல்லை என பேசியுள்ளார், இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, சென்னை அடுத்த பரந்தூரில்  இரண்டாம் கட்ட விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு செய்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  திமுக ஒன்றும் சாலை போடுவதற்கு எதிரி அல்ல, விவசாயிகளை அழைத்து பேசி அவர்களின் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு சாலை போடுங்கள், அல்லது மாற்று வழியை கண்டுபிடியுங்கள் என்பதுதான் திமுகவில் கொள்கை.

தவிர எட்டு வழி சாலையே போடக்கூடாது என்று திமுக ஒரு காலத்திலும் சொல்லவில்லை என சாதித்தார். அமைச்சரின் இந்த பேச்சை பலரும் கண்டித்து வருகின்றனர், எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழி சாலை திட்டத்தை அப்பட்டமாக எதிர்த்து விட்டு,  இப்போது அதை எதிர்க்கவில்லை என அமைச்சர் கூறுவது தடாலடி மோசடி என்றும் விமர்சித்து வருகின்றனர். அமைச்சரின் இந்த பேச்சால் கூட்டணி கட்சிகளே திமுக அரசை விமர்சிக்க தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக பாஜக மாற்றி மாற்றி பேசுவது தான் திராவிட மாடல், திமுகவின் வேலை என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தான் பேசியதற்கு விளக்கமளித்துள்ளார், அதில்,  எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை, எட்டு வழி சாலை திட்டம் வேண்டும் என்று எங்கும் நான் பேசவில்லை, இது ஒன்றிய அரசின் திட்டம், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியபோது எட்டு வழி சாலை அமைப்பதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய தான் கூறினார், போக்கு வரத்து அதிகரிக்கும் போது சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும், அப்போதைய அதிமுக அரசு இதுகுறித்து விவசாயிகளை அழைத்து பேசவில்லை, அதை செய்யத்தான் நாங்கள் கூறினோம், ஆனால் நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.  
 

click me!