கொடநாடு விவகாரத்தில் எதிர்பாராத டுவிஸ்ட்.. கைது செய்யப்பட்ட ‘அந்த’ நபர்…

Published : Oct 26, 2021, 08:55 AM IST
கொடநாடு விவகாரத்தில் எதிர்பாராத டுவிஸ்ட்.. கைது செய்யப்பட்ட ‘அந்த’ நபர்…

சுருக்கம்

கொடநாடு கொலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக கனகராஜ் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை: கொடநாடு கொலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக கனகராஜ் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை மட்டுமல்ல.. தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம். இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் கையில் எடுத்திருக்கும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக தொடக்கத்தில் இருந்தே சந்தேகப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நிகழ்ந்த 5 நாட்களுக்கு பிறகு விபத்தில் ஒன்றில் மரணம் அடைந்தார். இது திட்டமிட்ட படுகொலை என்று கனகராஜ் மனைவி, உறவினர்கள் அதிர வைத்தனர்.

இந் நிலையில் இந்த வழக்கு மீண்டும் இப்போது படு ஸ்பீடில் செல்ல ஆரம்பித்து இருக்கிறது. கனகராஜ் மரணம் குறித்து சேலம் மாவட்ட எஸ்பி மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். இதற்கு கேரளாவை சேர்ந்த சந்தோஷ் சுவாமி கொடுத்த சில முக்கிய தகவல்களே காரணம் என்று கூறப்படுகிறது.

இப்படி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த வழக்கில் புதிய டுவிஸ்ட்டாக கனகராஜ் சகோதரர் தனபால், அவரின் உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை இந்த வழக்கில் பல புதிய உண்மைகளை வெளிக்கொணரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், மீண்டும் அனைவரின் கவனமும் கொடநாடு வழக்கை நோக்கி திரும்பி உள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்