நம்பாதீங்க.. இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார்.. ஓபிஎஸ் முகத்திரையை கிழிக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி..!

By vinoth kumar  |  First Published Oct 26, 2021, 8:30 AM IST

சசிகலா எதிர்ப்பு, வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளால் தென் மாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கி உள்ள முக்குலத்தோர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தலின் போதே ஓபிஎஸ் பலமுறை வலியுறுத்தியும் எடப்பாடி விடாப்படியாக மறுத்து விட்டார்.


முக்குலத்தோர் மக்கள் தங்களை எதிர்ப்பார்கள் என்ற காரணத்தினாலேயே ஓபிஎஸ் இந்த நாடகத்தை நடத்துகிறார் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஆளுங்கட்சியான திமுக குறித்து ஆளுநரிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்திருந்தார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது;- சூரியனைப் பார்த்து ஏதோ குரைப்பது போல சிலர் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சசிகலா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 

Latest Videos

இந்நிலையில்,  நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்;- அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாத மக்கள் விருப்பம். சசிகலா சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த கொள்கைதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை. 

அரசியல் இயக்கத்திற்கு தலைமை தாங்கி இருப்பவர்கள் பிறரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும்போது கண்ணியத்தோடு வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். தொண்டனாக இருந்தாலும் சரி உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைவராக இருந்தாலும் சரி எவரையும் கண்ணியத்தோடு நடத்தவேண்டும் என்பது அண்ணா கற்றுத்தந்த கொள்கை என்று எடப்பாடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் பேசியிருந்தார். இவரது பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சசிகலா குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்தை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சசிகலாவை எடப்பாடி பழனிசாமி இழிவாகப் பேசியபோது அமைதியாக இருந்த ஓபிஎஸ் இப்போது சசிகலாவை கட்சியில் சேர்ப்பது  பற்றி ஆலோசிக்கப்படும் என  கூறும் காரணம் வருகிற 30ம் தேதி குருபூஜையில் கலந்துகொள்ள செல்லும்போது முக்குலத்தோர் மக்கள் தங்களை எதிர்ப்பார்கள் என்பதாலே இந்த நாடகத்தை நடத்துகிறார் என புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார். 

ஏற்கனவே, சசிகலா எதிர்ப்பு, வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளால் தென் மாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கி உள்ள முக்குலத்தோர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தலின் போதே ஓபிஎஸ் பலமுறை வலியுறுத்தியும் எடப்பாடி விடாப்படியாக மறுத்து விட்டார். அது தேர்தலிலும் எதிரொலித்தது. இந்த சூழலில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ் அளித்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக உருவெடுத்துள்ளது. 

click me!