
கமல் அரசியலுக்கு வந்தவுடன் பல விமர்சனங்கள் வர தொடங்கியது.இதனை அடுத்து ரஜினியும் அரசியலுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில்,இதுவரை ஒரு நடிகராக இருந்து வந்த நடிகர் கமல் தற்போது அரசியல்வாதி கமலாக உருவெடுத்துள்ளார்.
அதனை நிரூபிக்கும் வகையில்,சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது,
“நான் தலைவனாக வரவில்லை.வருங்கால தலைவர்களை சந்திக்க வந்திருக்கிறேன். நான் தனியாக நிற்கமாட்டேன். நீங்கள் தான் நான்”என்றும், நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என சொல்ல நான் வரவில்லை, அரசியலுக்கு வாங்க என உங்களை அழைக்க தான் வந்துள்ளேன் என கமல் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது,ஒரு அரசியல் வாதியாக தன்னுடைய முதல் கையெழுத்தை போட்டார்.அதில் கமலஹாசன் என கையொப்பமிட்டு, பொலிடிசியன் என எழுதியுள்ளார்
தற்போது கமல்ஹாசனின் இந்த கையெழுத்து வைரலாக பரவி வருகிறது.