
சுவர் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததால் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூரில் டிடிவி தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொண்டாட போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விழாவிற்கு அனுமதி வழங்கியது.
இதனை தொடர்ந்து 29ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில் கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெங்கமேடு மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்து வந்தனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் விளம்பரம் எழுதக் கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு வரவில்லை என கூறி சுவர் விளம்பரம் எழுதுவதை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்த அங்கு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர் அவரது ஆதராவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் செந்தில் பாலாஜியையும், அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.