
மாற்றத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும் என்றும், குறைகளை கண்டறிந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள் என நடிகர் கமல்ஹாசன் மாணவர்களிடையே பேசினார்.
தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல் மாணவர்களிடையே பேசினார். மாணவர்கள் முன்னிலையில் பேசிய அவர் நான் இங்கு தலைவனாக வரவில்லை. தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன் என்றார்..
நாட்டு நடப்புகளை தெரிந்துக்கொள்ள வேண்டியது மாணவர்களின் கடமை நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை; நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன் என குறிப்பிட்டார்.
ஜனநாயகம் என கூறிக் கொண்டு மக்களை சுரண்ட விடகூடாது என்றும் நேர்மையாக இருப்பது இயலாது என நினைக்கவேண்டாம். ஒழுங்காக பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை தூக்கி எறிய முன்வரவேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நமது வீடும் நாமும் சரியாக இருந்தால் நாடு சரியாக இருக்கும் என தெரிவித்த கமல், எனக்கு பிடித்த தலைவர் மகாத்மா காந்தி என்றும் ,காந்தியின் தொண்டனாக, பக்தராக இருந்த காமராஜர் எனக்குப் பிடித்த தலைவர். அம்பேத்கர், காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர், கருணாநிதி, எனக்கு பிடித்த தலைவர்கள் என்றும் தெரிவித்தார்