தோற்றால் போராளி... முடிவெடுத்தால் முதல்வர்... உலக நாயகனின் அரசியல் விஸ்வரூப போஸ்டர்ஸ்...

 
Published : Jul 22, 2017, 11:27 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
தோற்றால் போராளி... முடிவெடுத்தால் முதல்வர்... உலக நாயகனின் அரசியல் விஸ்வரூப போஸ்டர்ஸ்...

சுருக்கம்

kamal hassan fans made fosters at madhurai

தோற்றால் போராளி... முடிவெடுத்தால் முதல்வர்... இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூப ஆட்டம் ஆரம்பம். தமிழகமே காத்திருக்கிறது வா தலைவா வா என்று கமல் ரசிகர்கள் போஸ்டரால் அலங்காரம் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன தமிழக அரசியலில் புலாலை கிளப்பியவர்கள் ரஜினிகாந்த் ஆனால் அண்ட் புயல் சில நாட்களிலேயே காணாமல் போனது. அடுத்த சில வாரங்களில் ஆளும் அரசின் மீது தனது காட்டமான விமர்சனத்தை வைத்தார்.

அமைச்சர்கள் மீதான தமது ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், சி.வி சண்முகம் ஆகியோர் தங்களது கண்டன பேச்சால் திருப்பியடித்தனர்.  கடுமையான வாசகங்களையும், ஒருமையிலும் பேசினார். இதனையடுத்து ஆளும் அரசுக்கும், அரசுக்கு எதிராக குரலெழுப்பிய கமலுக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது. 

ஆளும் அமைச்சர்கள் மீதான அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அமைச்சர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் ஈ-மெயிலில் அனுப்ப வேண்டும் என கமல் ஹாசன் கூறி இருந்தார்.  

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக தமிழக மெங்கும் வாக்களித்தவனுக்கு கேட்கும் உரிமை கிடையாதா? சுயநலபோதையில் திரியும் நீங்கள் பொதுநலப் பார்வையில் பேசிய ஒரு சாமானியரை உலக நாயகனை சீண்டி பார்க்காதே என்று கமல் ரசிகர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், அதிகார போதையில் தறிகெட்டு திரியும் அமைச்சர்களின் அட்டூழியத்தை அடக்க கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

அதுமட்டுமல்ல கமல் என்ன சமூக சேவை ஆற்றினார்  
அவர் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்? தமிழிசை, ஹெச் ராஜா, பொன்னர் உள்ளிட்ட பாஜக தலைகளே தங்களது கண்டனத்தை பதிவேற்றினார்கள். இதனால் கடும் கோபத்திற்கு உள்ளன கமல் ரசிகர்கலோ கமலை அரசியலுக்கு வரவேற்று பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை  ஒட்டியுள்ளனர்.

மதுரை முழுவதும் கமலை அரசியலுக்கு வரக் வேண்டி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தோற்றால் போராளி... முடிவெடுத்தால் முதல்வர்... இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூப ஆட்டம் ஆரம்பம். தமிழகமே காத்திருக்கிறது வா தலைவா வா என்று தூங்கா நகரை துவம்சம் செய்துவிட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!