"தமிழக அரசு அனுப்புன மசோதா எங்க இருக்குனு தெரியல" - நிர்மலா சீதாராமன் பகீர் பேட்டி!!

Asianet News Tamil  
Published : Jul 22, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
"தமிழக அரசு அனுப்புன மசோதா எங்க இருக்குனு தெரியல" - நிர்மலா சீதாராமன் பகீர் பேட்டி!!

சுருக்கம்

nirmala seetharaman pressmeet about gst

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பு குறித்து பல்வேறு எதிர் கருத்துகளும், ஆதரவு கருத்துகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொருட்களின் விலை என்ற அச்சம் எழுந்த நிலையில், இது குறித்து பேட்டி அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விலை பொருட்களின் விலை உயராது என்றும், சிறு-குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதி அளித்திருந்தார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனாலும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குப் பிறகு பொருட்களின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதேபோல், சிறு - குறு தொழிலாளர்களும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக சிறு - குறு தொழிலாளர்கள் தாங்கள் பாதிக்கப்படுவது குறித்த புகார்களை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். 

தொழிலாளர்களின் புகார்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு காரணமாக சிறு - குறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருவதாக கூறினார். அவர்களின் புகார்கள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு, நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

நீட் தேர்வு தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசு 3 மாதத்திற்கு முன்பு அனுப்பிய சட்டமசோதா எங்கே இருகிறது என்று தெரியவில்லை என்றார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!