முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சிபிசிஐடி சம்மன்!

 
Published : Jul 22, 2017, 10:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சிபிசிஐடி சம்மன்!

சுருக்கம்

cbcid summon for ex minister palaniyappan

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் பாப்பிரெட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பழனியப்பனுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர் சுப்பிரமணி மர்ம மரணம் குறித்த வழக்கில் ஆஜராகும்படி சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மோகனூர் சாலையில் வசித்து வந்தவர் சுப்பிரமணி. இவர், அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்தார். அரசு கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு பெரும்பாலும் இவர்தான் ஒப்பந்ததாரராக இருந்து வந்துள்ளார். 

ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சென்னை வருமான வரித்துறை இவருக்கு சம்மன் வழங்கியது. இதனை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில்  தனது மோகனூர் தோட்டத்தில் இறந்த நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து கிடந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், பாப்பிரெட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர் சுப்பிரமணி தற்கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பனுக்கு, சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு, எம்.எல்.ஏ. பழனியப்பன் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ.250 கோடி ஊழல்... சேகர்பாபு, மேயர் பிரியா, ஸ்டாலினுக்கு தூய்மை பணியாளர்கள் பகீர் எச்சரிக்கை..!
முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!