யாருடன் கூட்டணி.? 2 நாட்களில் நல்ல செய்தி சொல்லுறேன்.. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் தகவல்

By Ajmal Khan  |  First Published Feb 19, 2024, 9:49 AM IST

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இரண்டு நாட்களில் நல்ல செய்தியோடு சந்திப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


கூட்டணி பேச்சுவார்த்தை- கமல் தகவல்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக இன்னும் தங்களது கூட்டணியை அறிவிக்கவில்லை. இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த முறை திமுக கூட்டணியில் இணைய இருப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

Tap to resize

Latest Videos

இரண்டு நாட்களில் நல்ல தகவல்

மக்கள் நீதி மய்யத்திற்கு கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியோடு கமல்ஹாசன் நேரடியாக கூட்டணி வைக்காமல், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் இருந்து மக்கள் நீதிமய்யத்திற்கு சீட் ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார்.

அவரிடம் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன். நான் அங்கிருந்து செய்தி கொண்டு வரவில்லை. இங்கிருந்து தான் உருவாக்கப்பட வேண்டும். எனவே நான் பேசிவிட்டு மீண்டும் சந்திக்கிறேன் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி.. அமித்ஷாவை சந்திக்க திட்டம்.?- காரணம் என்ன.?

click me!