"மக்கள் மோடியை தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மோடி" -என கூறி, ஈவிஎம்' மை எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இவிஎம் இயந்திரத்திற்கு எதிர்ப்பு
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், எனவே பழைய முறைப்படி வாக்குசீட்டு முறை கொண்டுவரவேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது என திருமாவளவன் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மோடியின் செல்லப்பெயர் என்ன.?
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் சார்பாக இவிஎம் இயந்திரம் தேர்தலில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 23 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈவிஎம் பிரதமர் மோடி. இது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்'. செல்லப்பெயர். "மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மோடி" -என கூறி, ஈவிஎம்' மை எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறது.
ஈவிஎம் பிரதமர் மோடி.
இது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்'. செல்லப்பெயர்.
"மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மோடி" -என கூறி, ஈவிஎம்' மை எதிர்த்து வட… pic.twitter.com/fFHVEq37tu
விடுதலை சிறுத்தை போராட்டம்
ஆதலால், சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம். நாட்டைக் காக்க- நாடாளுமன்ற சனநாயகம் காக்க - தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் காக்க- சிறுத்தைகள் யாவரும் சினந்தெழுவோம்! - மோடியின் ஈவிஎம் சதி வீழ்த்த இணைந்தெழுவோம்! பிப்ரவரி 23 - வெகுண்டெழுவோம்! என திருமாவளவன் பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்