‘ஆப்பு’ வைத்த தமிழ்நாடு போலீஸ்… பாஜக பிரமுகர் கல்யாணராமன் டுவிட்டர் பக்கம் முடக்கம்..!

Published : Oct 24, 2021, 06:24 PM IST
‘ஆப்பு’ வைத்த தமிழ்நாடு போலீஸ்… பாஜக பிரமுகர் கல்யாணராமன் டுவிட்டர் பக்கம் முடக்கம்..!

சுருக்கம்

பாஜக பிரமுகர் கல்யாணராமனின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் முடக்கி இருக்கிறது.

சென்னை: பாஜக பிரமுகர் கல்யாணராமனின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் முடக்கி இருக்கிறது.

பாஜகவின் கல்யாணராமன் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

தொடர்ந்து வன்முறை தூண்டுதல், மத மோதல்களை உருவாக்குவது தொடர்பான கருத்துகளை கூறி வந்ததால் அவரது பக்கத்தை முடக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு தமிழக காவல்துறை பரிந்துரை அனுப்பியது.

இதை ஏற்ற டுவிட்டர் நிறுவனம் கல்யாணராமன் டுவிட்டர் பக்கத்தை முடக்கி இருக்கிறது. அவர் பதிவிட்டுள்ள பதிவுகள் மத மோதல்களை தூண்டும் வகையில் இருப்பதாக உறுதி செய்ததால் டுவிட்டர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்