நகர்புற தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை: நகர்புற தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
undefined
தேனியில் இருந்து இன்று மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீசெல்வம் சென்னை புறப்பட தயாரானார். அப்போது அவர் மதுரை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். நகராட்சி தேர்தல், முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஓபிஎஸ் பதில் அளித்ததாவது: அடுத்து வரக்கூடிய நகர்ப்புற தேர்தலை அதிமுக எதிர்நோக்கி காத்திருக்கிறது. தேர்தலின் போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று நாங்கள் கூறி இருந்தோம். பெட்ரோல் விலையை பார்க்கும் போது அதுதான் இப்போது நிரூபணம் ஆகி உள்ளது.
ஏற்கனவே தெரிவித்தது போன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்ற ஒன்று என்று கூறினார்.