ரஜினிகாந்துக்கு அண்ணாமலை அனுப்பிய ட்விட்டர் 'மெசேஜ்'…! பரபரப்பில் ரசிகர்கள்

Published : Oct 24, 2021, 03:16 PM IST
ரஜினிகாந்துக்கு அண்ணாமலை அனுப்பிய ட்விட்டர் 'மெசேஜ்'…! பரபரப்பில் ரசிகர்கள்

சுருக்கம்

தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரையுலகின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நாளை வழங்கப்படுகிறது. இது குறித்து இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இந்த தருணத்தில் என் குருநாதர் பாலச்சந்தர் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது என்றார்.

இந் நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசாங்கத்தின் சார்பாக பாரதப் பிரதமர் திரு @narendramodi  அவர்கள் அரசு, சினிமா துறையில் மிக உயரிய விருதான "தாதா சாகேப் பால்கே" விருதை சூப்பர் ஸ்டார்  @rajinikanth  அவர்களுக்கு நாளை வழங்கவிருக்கின்றது என்ற செய்தி பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது! நல்வாழ்த்துக்கள் சார்! என்று பதிவிட்டு உள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!