பேராசை பிடித்து மக்களை சுரண்டும் மோடி அரசு… புள்ளி விவரங்களுடம் விளாசும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.!

Published : Oct 24, 2021, 12:02 PM IST
பேராசை பிடித்து மக்களை சுரண்டும் மோடி அரசு… புள்ளி விவரங்களுடம் விளாசும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.!

சுருக்கம்

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் ஒரு ஆண்டில் மட்டும் மத்திய அரசு நான்கரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் ஒரு ஆண்டில் மட்டும் மத்திய அரசு நான்கரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

ஜெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறையும் போது வரியை உயர்த்திய மத்திய அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்களின் விலை உயரும்போது வரியை குறைக்க முன்வர வேண்டும் என்பதும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசின்  பேராசையே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற பொருளாதாரம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ப.சித்ம்பரம் கலந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விற்பனையில் இருந்து ஓரளவிற்கு வருவாய் எடுக்கலாம் என்றும் ஆனால் இதையே முக்கிய வருவாயாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது என்று கூறினார்.

பெட்ரோல்-டீசல் மீது 33 விழுக்காடு அளவிற்கு வரி விதிக்கப்படுவது சரியல்ல என்று கூறிய சிதம்பரம், தவறான வரிக் கொள்கையே இதற்கு காரணம் என்றார். இந்த ஆண்டு மட்டும் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பெட்ரோல், டீசல் விற்பனையில் இருந்து வருவாய் கிடைத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.  

அதேபோல், ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைப்பு அதிகாரம் இல்லாத அமைப்பாக இருக்கிறது. மாநில நிதி அமைச்சர்களின் கருத்துகள் அந்த அமைப்பில் ஏற்கப்படுவதில்லை. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிதி அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்ததால், தமிழகம், கேரளா மற்றும் கொல்கத்தா மாநிலங்களின் நிதியமைச்சர்கள், நிதி அமைச்சர்கள் குழுவில் இடம் பெறவில்லை என்று ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!