தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்… கொளுத்தி போட்ட வேல்முருகன்…

Published : Oct 24, 2021, 06:06 PM IST
தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்… கொளுத்தி போட்ட வேல்முருகன்…

சுருக்கம்

தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடியை உருவாக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடியை உருவாக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் வேல்முருகன் கூறி இருப்பதாவது:

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை,கா் நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் தனிக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறார்கள்.

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்க வேண்டும். இதற்காக, அரசியல் கட்சிகளையும், அரசியல் இயக்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்துவதோடு, தனிக்கொடியை உருவாக்குவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!