கல்புர்கி, கவுரி-இருவரையும் சுட்டது ஒரே துப்பாக்கி தான்!! தடயவியல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்….

 
Published : Jun 09, 2018, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
கல்புர்கி, கவுரி-இருவரையும் சுட்டது ஒரே துப்பாக்கி தான்!! தடயவியல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்….

சுருக்கம்

Kalpurgi and Gowri langesh murder case

கர்நாடகத்தில் சிந்தனையாளர் எம்.எம். கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் ஆகிய இருவருமே ஒரே வகை துப்பாக்கியால்தான் சுடப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இருவர் மீதும் ஒரே நபராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்போக்குச் சிந்தனையாளரும், அறிஞருமான பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சங்-பரிவாரத்தைச் சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் குறைவதற்கு உள்ளாகவே, மறைந்த கன்னட எழுத்தாளர் பி. லங்கேஷின் மகளும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களுமே நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய இருவரும் சாதியமைப்பு, மனு தர்மத்திற்கு எதிராக போராடி வந்தவர்கள் என்ற நிலையில், அவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால், இக்கொலைகளின் பின்னணியில் சங் பரிவாரங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கேற்ப சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தடயவியல் குற்றப் பத்திரிகை பெங்கஞளூரு  3-ஆவது தலைமை பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய இருவரின் கொலைகளும் ஒரே துப்பாக்கியால்தான் நடந்துள்ளது; ஒரே நபரே இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார்; 7.65 மி.மீ. காலிபர் துப்பாக்கிதோட்டாக்களுக்கு பயன்படுத்தப்பட் டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கவுரி லங்கேஷ் உடலில் 3 தோட்டாக்கள் எடுக்கப்பட்டது; 1 புல்லட்அவர் மீது படாமல் தவறியதையும் சேர்ந்து மொத்தம் 4 தோட்டாக்கள் ஏவப்பட்டுள்ளன; நவீன்குமார் என்பவர் இக்கொலையில் சம்பந்தப்பட்டுஇருக்கிறார் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!