தொடரும் மருத்துவமனை அவலம்…. ஏ.சி.மிஷின் ரிப்பேர் ஆனதால் 5 பேர் மரணம்….

First Published Jun 9, 2018, 6:35 AM IST
Highlights
ac mechine repair and 5 patients death


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஏ.சி.எந்திரம் பழுதானதால் கடந்த 2 நாட்களில் 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். 2 நாட்களில் 5 முதியவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரம் கடந்த சில  நாட்களாக வேலை செய்யவில்லை என்றும், அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் முதியவர்கள் உயிர் இழந்ததாகவும் அவர்களுடைய உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனேவே உத்தர பிரதேச மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்ததைகள் பரிதாமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!