“நீட் தேர்வு தோல்வியால் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை” .. மீண்டும் உளறிக்கொட்டிய மாஜி அமைச்சர்.!

By Asianet TamilFirst Published Jul 25, 2022, 10:12 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டினார்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் தேனி மாவட்டம் தவிர்த்து எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “கட்சி நிர்வாகிகளை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் போன்ற அறிக்கைகளை தினந்தோறும் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஆனால், அதைப்பற்றி எல்லாம் அதிமுக தொண்டர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ, எங்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை. அவருக்கு கொடுத்த எந்த வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல்...! திமுகவை அலறவிடும் அதிமுக மாஜி அமைச்சர்

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு இதெல்லாம் ஓர் உதாரணம்தான். இதன் மூலம் அதிமுகவுக்கு யார் தீங்கு செய்தாலும் அவர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை கொடுத்து விடும். திமுக ஆட்சியில் சாமானிய மக்கள் யாரும் மின்சாரத்தையே பயன்படுத்த முடியாத அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு எடப்பாடி தான் சரி.. ஆனா எதிர்க்கட்சி பாஜக..! குண்டை தூக்கிப்போட்ட சி.டி ரவி

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், "நான் மாற்றி கூறி விட்டேன். அவர் நீட் தேர்வால் உயிரிழக்கவில்லை" என்று கூறி சமாளித்தார். திண்டுக்கல் சீனிவாசன் வழக்கமாக உளறிக்கொட்டுவது வழக்கம். கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதை,  நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் செய்துகொண்டதாக திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: இன்னும் 4 ஆண்டுகள்தான்.. தமிழகத்தில் என்னுடைய ஆட்சி.. சீமான் தாறுமாறு கணிப்பு..!

click me!