கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைப்பு.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு.. இதுதான் காரணமா?

By vinoth kumar  |  First Published Aug 29, 2023, 9:41 AM IST

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய சட்டப்பேரவை  தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர்,  தலைவர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அவர்கள் வகித்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கட்சி அமைப்பு கலைப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த ராமதாஸ்..!

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க கட்சியின் மாநில அமைப்புக்குழு செயலாளர் தருமபுரி ப.சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி மோதல் காரணமாக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

இதையும் படிங்க;-  திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்!

click me!