அம்மா ஆட்சியிலே கஜா கூட கூஜா ஆயிடுச்சு….அமைச்சரின் அதிரடி பேச்சு !!

By Selvanayagam PFirst Published Nov 17, 2018, 8:16 AM IST
Highlights

தமிழகத்தில் அம்மா ஆட்சி நடந்ததால் கஜா புயல் கூட கூஜா வாகிவிட்டதாகவும், புயலை அம்மா ஆட்சி ஓட ஓட விரட்டிவிட்ததாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாகை – தோரண்ம் இடையே கரையைக் கடந்தது. கிட்டத்தட்ட 4 மாவட்டனைப் புரட்டிப் போட்டது. 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. 40 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.

தற்போது நாகை, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது.

மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என பல துறைகள் ஒன்றினைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் இந்த துரித நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

கஜா புயல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கஜா குறித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மா அரசின் துரித நடவடிக்கையாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த சமயோஜித முன்னேற்பாடு நடவடிக்கையாலும் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முறையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேகமாக வந்த கஜா புயலானது அம்மா அரசின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து கூஜா புயல் போல ஆகிவிட்டது என கூறினார்.

அம்மா ஆட்சியில் கஜா புயலை ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ராஜேந்தி பாலாசு தெரிவித்தார்.

click me!