இது எங்க ஏரியா உள்ள வராதே !! மாநிலத்துக்குள் நுழைய சிபிஐ க்கு தடை போட்ட முதலமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Nov 17, 2018, 6:45 AM IST
Highlights

ஆந்திர மாநிலத்துக்குள் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு திரும்பப் பெற்றுள்ளார்.

ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்த ஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது.

பொதுவாக சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா பிறப்பித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆந்திர அரசு சிபிஐயின் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. ஆனால் சிபிஐயின் தலைமை அதிகாரிகளுக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுக்கள் எங்களுடைய ஒப்புதலை திரும்ப பெற செய்யும் கட்டாயத்திற்கு தள்ளியது.

சிபிஐ ஒவ்வொரு வழக்கிற்கும் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடனான ஆலோசனையை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஆந்தி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கையை மேற்கு வங்க மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். சிபிஐயை ஆந்திராவிற்கு பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என சந்திரபாபு நாயுடு சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பாஜகவால்  நோட் ஜேஞ்சராக வேண்டுமென்றால் இருக்கலாம், கேம் ஜேஞ்சராக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

மேற்கு வங்க மாநிலத்துள்ளும் சிபிஐ நுழைய தடை விதித்துள்ளார். இதையடுத்து இந்த இரண்டு மாநிலங்களுக்குள்ளளும் அனுமதி பெற்றுத் தான் விபிஐ விசாரணை நடத்தவோ அல்லது ரெய்டு நடத்தவோ முடியும்.

click me!