ஐநாவில் இந்தியாவை சம்பவம் செய்த கைலாசா.. பாஜகவை தெறிக்க விட்ட நித்தி. முழு விவரம் உள்ளே.

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2021, 6:50 PM IST
Highlights

இதனால் பல பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். இந்து மத  குருக்கள் மற்றும் இந்து மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக இந்திய ஊடகங்கள் உமிழும்வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்துக்களை ஐநா சபை பாதுகாக்க வேண்டுமென கைலாச நாட்டின் சார்பில் ஐநா மன்றத்தில் கலந்துகொண்ட பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் இந்துமதத்தில் உள்ள சிறுபான்மையின குழுக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக படுவதாகவும், அந்நாட்டில் தாங்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியா மீது கைலாசா பிரதிநிதி சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த புகார் குறிப்பாக மத்திய பாஜக அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக நித்யானந்தாவை போலீசார் தேடி வந்ததும், அதன் பிறகு அவர் கைலாச என்றொரு நாட்டை உருவாக்கியதும் தனிக்கதை. அந்நாட்டிற்கென தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என ஒரு தனி நாட்டிற்கான நடைமுறையை முழுவதுமாக உருவாக்கியதும் நாம் அறிவோம். இது தொடர்பாக நித்யானந்தா தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டும் வந்தார். இந்நிலையில் ஐநாவின் சிறுபான்மையினர் மன்றத்திற்கான 14வது அமர்வில் கைலாச நாட்டின் பிரதிநிதி கலந்துகொண்டு பேசியிருக்கிறார். இந்த அமர்வில் ஐநா விற்கான கைலாச நாட்டின் நிரந்தர பிரதிநிதியான ஸ்ரீ நித்திய மோட்ச பிரியானந்தா கைலாச சார்பில் பேசியிருந்தார். டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த அமர்வில் உலகில் முழுவதுமுள்ள இந்துக்களின் கலாச்சாரம் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசியிருக்கிறார். ஐநா கைலாச என்ற நாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தியா சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு குறித்தும் கைலாச பிரதிநிதி பேசியுள்ளார். அவர் ஆற்றிய உரையின் விபரம் பின்வருமாறு:-  

மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் ஐநா பிரதிநிதிகளே.. நான் கைலாசா என்னும் தேசத்தின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உலகெங்கிலும் உள்ள 200 கோடி இந்துக்களின் தலைவரான நித்யானந்தா தலைமையிலான தேசத்தின் பிரதிநிதி நான். சிறுபான்மை இன இந்து  மரபுகள் மீதான தாக்குதலை நான் வெளிச்சத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்து மதம் என்பது ஒரே ஒரு பழக்கவழக்கத்தை கொண்ட மதம் அல்ல, பலநூறு சம்பிரதாயங்கள், ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள், அறிவுசார் சிந்தனைகளால் உருவானது இந்து மதம். சமீபகாலமாக பல இந்து மத குருக்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்து மத கலாச்சாரம் பெரும்பான்மை சமூகத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் பல கலாச்சாரங்கள் அழிந்துபோக தொடங்கிவிட்டன. இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பிடம் இருந்து, வருத்தமோ, கண்டனங்களோ கூட இல்லை. தாக்குதல் நடத்துபவர்களை நாங்கள் கண்டறிவது கடினமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கைலாச தேசமும், இந்துக்களின் பிதாமகனான நித்தியானந்தா பரமசிவம் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி  இருக்கின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் சத்தமில்லாமல் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களெல்லாம் அடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள். கைலாச என்னும் இந்து தேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த தீவிரவாத சக்திகள் குறிப்பாக பெண்ணுரிமை, தலித் பெண்ணுரிமை, ஓர் பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கியுள்ளனர். 2019ஆம் ஆண்டு நாங்கள் ஐநா சிறுபான்மையினர் மன்றத்தை அணுகி, இதுபோன்ற துன்புறுத்தல் தொடர்பாக வாதத்தை முன் வைத்தோம், இந்த விவகாரம் இந்திய ஊடகங்களுக்கு தெரிந்தததும் கைலாச தேசம் ஒரு இந்திய தேசத் துரோகம் என்றும், மத்திய அரசு ஆதரவுடன் இயங்கும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. திட்டமிட்டு எங்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்பினார்கள். கைலாச நாட்டின் தலைவர்கள் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குஜராத்தில் உள்ள எங்களது மகளிர் பல்கலைக்கழகம் உள்ளூர் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி தரைமட்டமாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக கைலாச சார்பில் ஐநா மன்றங்களுக்கு பல அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2021 ஜூன் மாதம் பெண்ணுரிமை, பெண்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்குதல் தொடர்பாகவும் சிறப்பு அறிக்கை ஒன்று அனுப்பினோம். 

பெண்கள் கொல்லப்படுவது எப்படி தடுக்க வேண்டும் என்பதை விலக்கி அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தோம். செப்டம்பர் மாத இறுதியில் கைலாச சமர்ப்பித்த தனது அறிக்கையில் இந்திய ஊடகங்கள் கைலாச தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிடுகிறது என்றும், இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது என்றும் வலியுறுத்தி இருந்தோம். மேலும் சிறுபான்மையினர் மீது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசியிருந்தோம், இது உலக அமைதியை விரும்பும் ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் பல வடிவங்களில் இருக்கிறது. இந்தத் தாக்குதல்களை முன்கூட்டியே கணிப்பது மிக கடினமாக இருக்கிறது. இப்படியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினர் காக்கும்படியாக எங்கள் அனுபவத்தில் இருந்து சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம் என்றும் அவர் பேசியுள்ளார். அவரின் அந்த பரிந்துரையில் இந்து மத சிறுபான்மையினர் மற்றும்  பிற இந்து அமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக ஐநா சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பெரும்பான்மை குழுக்களில் இருந்து இதை வேறுபடுத்தி பார்ப்பது கடினம் என்றாலும் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தை பெரும்பான்மையின சமூகங்கள் துன்புறுத்துவதை போல இந்து மத சிறுபான்மையினரும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

இதனால் பல பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். இந்து மத  குருக்கள் மற்றும் இந்து மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக இந்திய ஊடகங்கள் உமிழும்வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் இந்திய நீதிபதிகள் சிறுபான்மையினரின் துணை  மரபுகளில் தலையிடுவது மற்றும் உரிமைகளில் தலையிடுவது போன்ற போக்குகளும் அதிகரித்திருக்கின்றன. இதற்கு ஆதரவாக ஊடகங்களில் கட்டமைக்கப்படும் பொது பிம்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

 

click me!