இவர்களுக்கு மட்டும்தான் வேலை.. சபதம் எடுத்த தொழிலதிபர்.. ஆண்டவா இது எங்க போய் முடியபோகிறதோ.?

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2022, 6:54 PM IST
Highlights

வெறுப்பு பேச்சு பேசியவர்களின் மீது அரசியல் கட்சிகளின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலைதான், சத்தீஷ்கர் மாநிலத்தில் மதவெறியைத் தூண்டும் வகையில் அம்மாநில தொழிலதிபர் ஒருவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

இந்துக்களுக்கு மட்டும்தான் வேலை வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் நெருப்பு மூட்டி சபதம் எடுத்துள்ள  சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது தொடர்பான சில வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த நடவடிக்கையை பலரும் கண்டித்து வருகின்றனர்.

சமீபகாலமாக மத வெறுப்பு பிரச்சாரங்கள்  மத வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டவிரோதமாக பசுக்களை கடத்துவதாகவும் அல்லது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகத்தின் பெயரில் பல்வேறு இஸ்லாமிய மற்றும் தலித் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிர இந்து வலதுசாரி குழுக்கல் இஸ்லாமியர்கள் லவ் ஜிகாத் இல் ஈடுபடுவதாக கூறி அவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவை பரப்பியது இஸ்லாமியர்கள்தான் என தப்லீக் ஜமாத் கூட்டத்துடன் சம்பந்தபடுத்தி பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தியாவில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.  சிஐஏ எனும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் மோடி அரசுக்கு எதிராக இருந்து வருகிறது.

இப்படி மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் சந்தித்துவரும் துயரங்கள் பல பல என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 19 வரை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில் இந்து இயக்கத் தலைவர்கள் பேசிய வெறுப்பு பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சிறுபான்மையினரை கொல்லவும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களை சூறையாடவும் இந்துக்கள் திரண்டு முன்வரவேண்டும் என கலந்து கொண்டவர்கள் பேசினர். குறிப்பாக நாட்டில் 200 மில்லியன் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும், அதற்கு இந்துக்கள் முன்வர வேண்டும் என்று அவர்கள் பேசினர். 100 இந்துக்கள் போதும் 20 லட்சம் இஸ்லாமியர்களை கொல்ல, எப்போதும் தயாராக இருக்க வேண்டும், நாதுராம் கோட்சேவை போல நாம் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் அனைவருக்கும் கொலை வெறியுடன் பேசினர். அவர்களின் இந்த பேச்சு  பல அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றன.

வெறுப்பு பேச்சு பேசியவர்களின் மீது அரசியல் கட்சிகளின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலைதான், சத்தீஷ்கர் மாநிலத்தில் மதவெறியைத் தூண்டும் வகையில் அம்மாநில தொழிலதிபர் ஒருவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோவாவில் தீவிர இந்து சித்தாந்த அமைப்பில் தொடர்புடைய தொழிலதிபர், தனது ஆதரவாளர்களைத் திரட்டி தங்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், இந்து தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என சபதம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதற்காக நெருப்பு மூட்டி அதில் அவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். அதற்கான வீடியோ சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு  பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் இரவு நேரத்தில் சிலர் நெருப்பை மூட்டி  அதைச் சுற்றி வட்டமாக நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 

அந்த கூட்டத்திற்கு மத்தியில் நிற்கும் ஒருவர் இந்தியாவை இந்துமத உணர்வு கொண்ட நாடாக மாற்றுவோம், இந்துக்களுக்கு சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அனைத்து வகைகளிலும் உதவுவோம், வேலை கொடுப்போம் என சபதம் எடுப்பது போன்ற காட்சிகள் அதில் உள்ளன. அந்த வீடியோவின் இறுதியில் அவர்கள் ஜெய் ஸ்ரீராம்  என முழங்குகின்றனர். இதுதொடர்பாக கோர்பா காவல்துறைக்கு டுவிட்டர் மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அது பாங்கி மோங்ரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அங்கு வசிக்கும் தொழிலதிபர் பிரமோத் அகர்வால் இந்து சுரக்ஷா சேனா என்ற அமைப்பில் தொடர்புடையவர். அவர் மற்றவர்களுடன் ஒன்றுகூடி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் என்றும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் பிரமோத் அகர்வால் மற்றும் அவருடன் உறுதிமொழி எடுத்தவர்கள் மீது கொட்வாலி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!