மூச்சுத்திணறலுடன் ஜெயலலிதா கடைசியாக பேசிய ஆடியோ வெளியீடு...  கடுமையாக அவதிப்படுவது ஆடியோவில் பதிவு!

First Published May 26, 2018, 4:18 PM IST
Highlights
Jayalalithas Audio while she was Admitted in hospital is submitted in Arumugasamy commission


ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தி மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியலுடன், ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய மருத்துவ குறிப்புகளையும் மற்றும் ஜெயலலிதா முச்சுத் திணறலுடன் கடைசியாக பேசிய ஆடியோ வெளியானது.

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் அரசு செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டனர். ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தி மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய மருத்துவ குறிப்புகளையும் மற்றும் ஜெயலலிதா முச்சுத் திணறலுடன் கடைசியாக பேசிய ஆடியோவை அவர் தாக்கல் செய்தார்.

அதில் அதிகாலை 5.05 மணி முதல் 5.35 மணிக்குள் காலை உணவு காலை 5.45க்கு கீர்ன் டீ, காலையில் 4 இட்லி மற்றும் பிரட், மதிய உணவு 2 மணிக்கு வழங்க வேண்டும். மதிய உணவாக பாசுமதி அரிசி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் -2 ம் தேதி அவர் 106.9 கிலோ எடை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா பேசிய ஆடியோவில், மூச்சுத்திணறல் தியேட்டரில் விசிலடிப்பது போல உள்ளது என மூச்சை வேகாமாக இழுத்து விட்டிடுக் கொண்டே சொல்கிறார். பேசுவதற்கு முன்பாக இரண்டுமுறை இரும்புகிறார், சக்கரை அளவு 140/80 உள்ளது. இது எனக்கு பரவாயில்லை என இருமலுடன் பதில் சொல்லுகிறார். இதனையடுத்து, டாக்டர்கள் பரிசோதனைக்காக இரத்தம் எடுக்க முயற்சிக்கிறார்கள். அப்போது ஜெயலலிதாவோ ரத்தம் வரவில்லைஎன்றால் விட்டுவிடுங்கள் என சொல்கிறார்.

click me!