வெளியானது ஜெ.வின் உணவு பட்டியல்....!

First Published May 26, 2018, 3:54 PM IST
Highlights
j food list


முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதென பன்னீர் செல்வம் கூறியதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரின் மரணத்தை குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்று அமைத்து ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரித்து வருகிறது. 

Latest Videos

இந்நிலையில் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் சசிகலா உறவினர் டாக்டர் சிவக்குமார், ராஜா செந்தூர் பாண்டியன், வீரப்பெருமாள் உட்பட நான்கு பேரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அதில் மூச்சு திணறலுடன்அப்பல்லோவில் பேசிய ஆடியோவை தாக்கல் செய்துள்ளார். மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன் ஆக்ஸ்டு 2ந்தேதி 2016 வீட்டில் இருக்கும் போது தமக்கு தேவையான உணவு பட்டியலை தன் டைரியில் ஜெ தன் கைப்பட எழுதியுள்ளார்.

அதன்படி காலை கீரின் டீ, பிஸ்கட்டும் பின் உணவாக ஒன்றை இட்லி, காபி, இளநீர் 4 துண்டு ரொட்டி, காலை 11.30 அளவில் பாசுமதி அரிசி தயிர் -1 கப்பும் உணவாக வழங்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார் மாலை 6.30க்கு இட்லி அல்லது தோசை,  வால்நட்ஸ் 200 மில்லி பால்  தேவை எனஎழுதியுள்ளார்.  

மருத்துவமனையில் இருக்கும் போது ஜெயலலிதா சசிகலாவை அழைக்கவேண்டுமென்றால் S என எழுதுவார்.  டாக்டர் தேவையென்றால் dr எனக் குறிப்பிடுவார். எனத் தெரிவித்துள்ளார். 
 

click me!