அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.. இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஷாக் !

By Raghupati R  |  First Published Jul 16, 2022, 6:29 PM IST

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றியதோடு, சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. 

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..உதயகுமார் ஊழல் பட்டியல் ரெடி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஓகேவா ? மிரட்டும் கோவை செல்வராஜ்

இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வன்முறை தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அதேபோல் வன்முறை தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டது. காவல்துறையின் அறிக்கைக்கு பதில் மனுவை திங்கட் கிழமை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. 

மாநகர் முழுவதும் ‘அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே, எடப்பாடி பழனிச்சாமி கிடையாது’ என மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டபட்டுள்ளது. இதனை அதிமுக பெண் நிர்வாகி தமிழரசி ஒட்டியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!

click me!