நள்ளிரவில் சிறுத்தை காட்டில் பெண்சிங்கம்! யாருக்கும் தெரியாத... இரும்பு மனுஷியின் த்ரில்லிங் ரகசியங்கள்...

 
Published : Dec 05, 2017, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நள்ளிரவில் சிறுத்தை காட்டில் பெண்சிங்கம்! யாருக்கும் தெரியாத... இரும்பு மனுஷியின் த்ரில்லிங் ரகசியங்கள்...

சுருக்கம்

Jayalalithaa in the jungle at midnight

ஜெயலலிதா அழுத்தமான ஆளுமையாக இருக்கலாம்! ஆனால் அன்பானவர்! உள்ளுக்கு ஒரு குழந்தை போன்றவர்! அதனால்தான் குழந்தைகளை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். யாரையாவது தனக்குப் பிடித்துவிட்டால் பாசத்தை கொட்டிக் கொண்டாடிவிடுவார். 

எளிதில் நெருங்க முடியாத முதல்வர், சர்வாதிகாரமான பொதுச்செயலாளர் என்றுதான் பலருக்கு அவரை தெரியும். ஆனால்  அவரது பர்ஷனல் பக்கங்கள் மிக எளிமையானவை. கோட்டையிலும், போயஸிலும் இருக்கும் போது வேண்டுமானால் அவர் இறுக்கமானவராய் இருக்கலாம். ஆனால் சிறுதாவூர், கோடநாடு என்று வந்துவிட்டால் முழுக்க முழுக்க மாறிவிடுவார். 

ஜெயலலிதாவின் இன்னொரு முகம் பற்றிய பதிவு இது...

*    ஜெயலலிதா மனிதர்களை விட விலங்குகளை மிகவும் நேசித்தவர். வீட்டில் செல்ல நாய்களை வளர்த்தார்.

*    நாய்களுக்கு இணையாக ஜெ.,வுக்கு யானைகள் பிடிக்கும். ஜோஸியர் சொன்னதால்தான் யானைகளுக்கு முகாம் நடத்தினார், உணவு கொடுத்தார்! என்று சொல்வார்கள். எது உண்மையோ ஆனால் யானைகள் என்றால் ஜெ.,வுக்கு கொள்ளை பிரியம்.

*    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்டி மகிழும் அளவுக்கு விலங்குகள் மீது அலாதி பிரியம். 

*    கோடநாட்டில் தங்கியிருக்கும்போது முதுமலை வனத்தினுள் ஸ்பெஷல் சவாரி சென்று வன விலங்குகளை இயற்கை சூழல் கண்டு ரசித்தார். 

*    கோடநாடில் இருக்கும்போது நள்ளிரவில் எஸ்டேட்டில் சேரை போட்டமர்ந்து சிறுத்தை, முயல் ஆகியவற்றின் நடமாட்டத்தை கண்டு குதூகழிப்பார். (முதல்வராக இருக்கும் போதும்)

*    சிறுதாவூர் பங்களாவில் பணிபுரியும் வேலையாட்கள் அத்தனை பேரையும் பர்ஷனால பெயரை சொல்லி அழைக்குமளவுக்கு பரிச்சயம். 

*    கோடநாடு பங்களா மற்றும் எஸ்டேட்டில் பணிபுரிபவர்களையும் அவர்களை பெயரை சொல்லி சரியாக அழைப்பார்.

*    கோடநாடில் இருக்கும் போது தனது எஸ்டேட்டை பேட்டரி காரில் சென்று பார்ப்பார்.

*    சில நேரங்களில் பேட்டரி காரை ஜெ.,வே ஓட்டுவார். அருகில் சசி அமர்ந்திருப்பார். 

*    சிறுதாவூரோ அல்லது கோடநாடோ, நவராத்திரி சமயங்களில் இங்கே இருந்தால் பங்களாவில் கொலு, தினமும் பூஜை, ஜெ.,யின் ஸ்பெஷல் பாட்டு, ஊழியர்களுக்கு பிரசாத விநியோகம் என்று அமர்க்களப்படும். 

*    ஜெ.,வுக்கு டிரைவிங்கில் அலாதி பிரியம். கோடநாடில் இருக்கும் போது சில இடங்களுக்கு தானே காரை ஓட்டிச் செல்வார். தனது எஸ்கார்ட் வாகன டிரைவர்களுடன் போட்டி போட்டு கார் ஓட்டிய சம்பவங்களும் உண்டு.

*    கோடநாடில் பனி மூட்டத்தின் இடையே ஃபாக் லேம்பை ஒளிரவிட்டபடி வண்டி ஓட்ட  ஜெ.,வுக்கு அலாதி விருப்பம். ஆனால் சசி தடுத்துவிடுவார்.

*    எஸ்டேட் குழந்தைகளுக்கு வருடா வருடம் சாக்லேட், பென்சில் பாக்ஸ் என பரிசளிப்பார். நல்ல மதிப்பெண் வாங்கும் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் பரிசு நிச்சயம். 

*    புதுவருடத்தில் எஸ்டேட் பணியாளர்களுக்கு வெஜ், நான் வெஜ் என இரண்டு வகை விருந்து அமர்க்களப்படும். 

*     ஜெயலலிதாவுக்கு பொக்கே கொடுக்கும் போது பர்ப்பிள் கலர் பொக்கே கொடுத்தால் சந்தோஷப்படுவார். 

*    ஜெயலலிதாவை சந்திக்க செல்லும் மாவட்ட செயலாளர்கள், புதிய அமைச்சர்களுக்கு அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பேச வேண்டும், என்று சின்னதாய் வகுப்பெடுத்து அனுப்பப்படும். 

*    நிர்வாகிகள் வீட்டு புதுமண தம்பதிகள் ஆசி பெற சென்றால் சின்னதாக ஒரு பாக்ஸை பரிசளிப்பார். அதில் வெள்ளியால் ஆன அன்பளிப்பு இருக்கும். 

*    கோடநாட்டில் சில நேரம் போர்டிகோவில் நின்று அவர் சத்தமாக பேசி, சிரிப்பது  கேட்டில் பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸ் வரை கேட்டு ஆச்சரியப்படுத்தும்.

*    குழந்தைகளை பிடிப்பது போலவே வயதான பெண்களையும் அதிகம் அரவணைப்பார். 

*    கோடநாட்டில் இருக்கும் போது எஸ்டேட் அருகிலுள்ள கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கே ஒரு சிறுவன் சாமி கும்பிட வந்திருந்தான். இவர் அவனை விசாரித்தபோது அன்று தனக்கு பர்த்டே என்றான். அடுத்த சில நிமிடங்களில் ஆசீர்வாதத்தோடு, அன்பளிப்புகளும் அவனை சந்தோஷப்படுத்தின.

*    முதல்வராக இல்லாத சமயங்களில் கோடநாட்டில் தங்கியிருக்கும் போது சின்ன பாதுகாப்பு படையுடன் இரவில் ஊட்டி வரை சென்று திரும்புவார். ஊர் சுற்றுவதில் அவ்வளவு விருப்பம். 

*    ஜெயலலிதாவின் சாப்பாடு மிக ஆச்சாரமாக இருக்கும். தனி குக் தான் எப்போதும். வேகவைத்த உணவுகளே அதிகம் எடுப்பார். ஸ்வீட் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் சுகர் அவருக்கு இம்சை தந்தது. மதிய உணவுக்கு முன் மினி வெஜ் பப்ஸ்  போன்றவற்றை எடுப்பார். 

*    சிறுதாவூரில் இருக்கும்போது காலையில் ஜன்னலின் வழியே கிருஷ்ணர் கழுகு தரிசனத்தை எதிர்பார்ப்பார். 

*    துளசி தீர்த்தம் மிகவும் பிடிக்கும். பெருமாள் மீது பக்தி அதிகம். தன்னை சுற்றிலும் பெருமாள் எனும் பெயருடைய அல்லது அவரது அவதார பெயருடைய நபர்களையே பாதுகாப்புக்கு வைத்திருந்தார். 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!