கமல் கட்சி ஆரம்பிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன்! ஏன் தெரியுமா? ராதாரவி சொல்லும் விளக்கம்...

 
Published : Dec 05, 2017, 11:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
கமல் கட்சி ஆரம்பிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன்! ஏன் தெரியுமா? ராதாரவி சொல்லும் விளக்கம்...

சுருக்கம்

Actor Kamal start the party

நடிகர் கமல் கட்சி ஆரம்பிச்சா சந்தோஷப்படுவேன்; ஏன்னா அவருக்கு மக்களோட நிலை என்னன்னு தெரிந்து கொள்வதற்காகவாவது அவர் அரசியலுக்கு வரணும் என்று திமுக பேச்சாளர் ராதாரவி கூறியுள்ளார்.

திமுக பேச்சாளர் ராதாரவியிடம், வார இதழ் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, ராதாரவியிடம், ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதாக சொல்லி வருகிறார்களே? என்று கேள்வி கேட்டது.

அதற்கு பதிலளித்த ராதாரவி, ரஜினி ஒரு நல்ல மனிதர். அவரைத் தொந்தரவு பண்ணக் கூடாது. போர் வருதுன்னு ரசிகர்களிடம் சொல்லியிருக்கார். அதைக் கேட்டுட்டு வந்து, அவர் அரசியலுக்கு வர்றார்... அரசியலுக்கு வர்றார்னு சொல்லிட்டு இருக்காங்க. அதெல்லாம் வரமாட்டார். அப்படியே வந்தார் அப்பறம் பேசிக்கலாம் என்று ரஜினி குறித்து பதிலளித்தார்.

அரசியலுக்கு கமல் வருவது குறித்து பேசும்போது, கமல் என்னோட பால்ய சிநேகிதர். அவர் கட்சி ஆரம்பிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். ஏன்னா... அவருக்கு மக்களோட நிலை என்னன்னு தெரியணும். படம் நல்லா ஓடி 100 கோடி வசூலுன்னு சொல்றாங்க. அந்த 100 கோடி எங்கெல்லாம் இருந்து வருதுன்னு அவர் அரசியலுக்கு வந்து ஊர் ஊரா போய் பார்த்தா அவருக்கு தெரியும்.

பில்கேட், பேஸ்புக், டுவிட்டர் வாட்ஸ் அப் எல்லாம் பயன்படுத்துறவங்க சோம்பேறிகள்னு சொல்லியிருக்கார். ஆனால். இவர் இப்போதான் டுவிட்டர்ல அரசியல் பேச ஆரம்பிச்சிருக்கார். ஏரி, குளம் எல்லாம் போய் பார்த்துட்டு வந்தார். கடற்கரையோரமா கீழ்நிலையில இருக்கும் இடமெல்லாம் இருக்கு. அதுக்கு ஏதாவது செஞ்சு சரி பண்ணித்தரலாம். ஒரு பொது நல ஆர்வலரா இருந்திருக்கலாம்.

ஒரு நடிகனா கமல் இவர் க்ரேட் ஆர்டிஸ்ட். அவர் அரசியலுக்கு வந்தா வரட்டும். அவர் உள்ள வந்து என்ன பேசுறார்னு பார்ப்போம். அப்படி நியாயங்களையுப் பேசுனா அவர் எப்படி நடந்துக்குறாரானு பார்த்துட்டு பேசுவோம். என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!