ஜெ. நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

First Published Dec 5, 2017, 11:34 AM IST
Highlights
Former Chief Minister Jayalalitha Memorial Day


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதியில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை துக்க தினமாக அனுசரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. அண்ணா சாலையில் தொடங்கிய இநத் பேரணி வாலாஜ சாலை வழியாக மெரீனாவை வந்தடைந்தது.இந்த பேரணியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சர்கள் உள்ளிட் பலர் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கறுப்புநிற புடவையில் பேரணியில் பங்கேற்றனர்.

பின்னர், ஜெ. நினைவிடம் சென்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர், அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள்ர முதலமைச்ச்ர கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் உறுதி மொழி எடுத்தனர்.

click me!