எங்கே போனார் எடப்பாடி?

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
எங்கே போனார் எடப்பாடி?

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த படியாக மிகவும் செல்வாக்குடன் திகழ்பவர் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் வகித்து வந்த துறைகள் எடப்பாடிக்கு ஒதுக்கப்படும் என்ற பேச்சும் எழுந்தது. அந்த அளவுக்கு மிகவும் செல்வாக்கு மிக்கவராக உயர்ந்தவர் எடப்பாடி.

நேற்று நள்ளிரவு நடைபெற்ற எம்எல் ஏ க்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கவில்லை. அதற்கு அப்போல்லோ மருத்துவமனையில் வெங்கையா நாயுடுவுடன் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டதால் தலைமை கழகத்திற்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டது . இந்நிலையில் இந்தியா முழுவதிலும் இருந்த பல்வேறு தலைவர்களும் முதலமைச்சரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் முக்கிய அமைச்சரான எடப்பாடி மட்டும் இன்று முழுவதும் கண்ணில் தென்படவில்லை.

எங்கே போனார் அவர் என அதிமுக தொண்டர்களிடயே கேள்வி எழுந்தது.

ஆனால் எடப்பாடி இங்கே என தேடிக்கொண்டிருந்த நிலையில் தான் அமர்த்த இடத்தில், இருந்து  எழாமல் இருந்திருக்குறார் என்பது முதலமைச்சரின் உடலை  எடுத்து செல்லும் போதுதான் தெரிந்தது.

அப்போது தான்  கீழே  அமர்ந்திருந்த எடப்பாடி எழுந்து நின்றார் அப்போது தான் அவர் அங்கு இருக்கிறார் என்பது தெரியவந்தது. 

PREV
click me!

Recommended Stories

தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?
ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!