சென்று வா சகோதரி கண்கலங்கிய பிரதமர் மோடி - நெஞ்சை உருக்கிய அஞ்சலி

 
Published : Dec 06, 2016, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
சென்று வா சகோதரி கண்கலங்கிய பிரதமர் மோடி - நெஞ்சை உருக்கிய அஞ்சலி

சுருக்கம்

பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காட்சி அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே இருந்த ஆழமான சகோதர பாசத்தை உருக்கமாக வெளிப்படுத்தியதாக இருந்தது.

பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இருக்கும் நட்பு அரசியலைதாண்டி சகோதர பாசமிக்க நட்பு. யாருக்குமே சட்டென நெருங்காத முதல்வர் ஜெயலலிதா மாற்று அணியில் இருந்தாலும் மோடிக்கு பாராட்டும் நட்பும்பாராட்டியவர். 

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தான் வர இயலாவிட்டாலும் தனது அமைச்சரவை சகாக்கள் மூலம் வேண்டிய உதவிகளை செய்தவர் மோடி. 

முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தது தமிழகத்துக்கு பேரிழப்பாக அமைந்தது. முதல்வருக்கு அஞ்சலி செலுத்த தனி விமானம் மூலம் சென்னை வந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு விமானப்படை தளத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி ஹாலுக்கு வந்தார். 

மக்கள் கூட்டத்துக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ  வந்த பிரதமர் கதறலுடன் வந்த முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை கட்டி அணைத்து தோளில் தட்டி ஆறுதல் கூறினார்.

அனைவருக்கும் வணக்கம் வைத்தபடி ,  நேராக படியேறி சென்று முதல்வருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ஒரு முறை கூட ஜெயலலிதா முகத்தை அவர் பார்க்க முயலவில்லை. பார்த்தால் கண்கலங்கி உடைந்து விடுவோமோ என்பதால் அவர் முதல்ப்வர் முகத்தை சற்று நேரம் பார்க்கவே இல்லை. 

பின்னர் முதல்வர் காலடியில் மலர் வளையம் வைத்த பிரதமர் நேராக சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். அப்போது கண்கலங்கிய சசிகலா தலையில் இரண்டு முறை கைகளை வைத்து ஆதரவாக தடவி அழக்கூடாது என்று ஆறுதல் கூறினார். 

பின்னர் ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு முதன் முறையாக ஜெயலலிதாவின் முகத்தை நிமிர்ந்து சில நொடிகள் பார்த்துகொண்டே இருந்தார். அவரது கண்கள் கலங்கியது , ஆனால் ஒருவாறு சமாளித்து கொண்டு எல்லோருக்கும் வணக்கம் வைத்து திரும்பிய முதல்வர் தனது காரில் ஏறுமுன்னர் வழியனுப்ப வந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். 

அப்போது கதறி அழுத ஓ.பன்னீர் செல்வத்தை கட்டி அணைத்து ஆறுதல் கூறிவிட்டு தனது காரில் புறப்பட்டு சென்றார். பிரதமர் வந்து சென்ற அத்தனை நிமிடங்களும் உருக்கமாக இருந்தது. தன்னை கட்டுப்படுத்திகொள்ள பிரதமர் மிகுந்த சிரமப்பட்டதை காணமுடிந்தது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!