ஜெயலலிதாவை இன்னும் பார்த்து அலறும் ஓபிஎஸ்... வானத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறார்..!

Published : May 02, 2019, 03:13 PM ISTUpdated : May 02, 2019, 03:17 PM IST
ஜெயலலிதாவை இன்னும் பார்த்து அலறும் ஓபிஎஸ்... வானத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறார்..!

சுருக்கம்

ஜெயலலிதா வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன் என உருக்கமாக பேசியிருக்கிறார். 

ஜெயலலிதா என் மீது வைத்த நம்பிக்கைக்கும் அவருடைய தொண்டர்களின் அளவற்ற பாசத்துக்கும் நானும் என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கும் நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது. என் உயிர் போகும் நாளில் அதிமுக கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக வைத்து வாழ்கிறேன். அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிட்டு புறவாசால் வழியாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். திமுக இந்த மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் இரண்டிலும் படுதோல்வி அடையும். மொத்தமாக ஸ்டாலினின் ஆட்சியை பிடிக்கும் கனவு காணாமல் போகும் அளவிற்கு மக்கள் பாடம் புகற்றுவார்கள் என்றார். 

வாகனத்தில் இருந்து ஜெயலலிதா அதிமுக ஆட்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார். அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது. நாங்கள் அந்த பயத்தில்தான் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம். மேலும் ஜெயலலிதாவுடன் 32 ஆண்டுகள் இருந்து அவரை காப்பாற்ற முடியாதவர்கள் தற்போது அமமுக உள்ளனர் என மறைமுகமாக தினகரனை ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!