ரூ.790,00,000 ரொக்கம்... அசரவைக்கும் மாடமாளிகை... ஏழை ஆட்டோ டிரைவரை திடீர் கோடீஸ்வரராக்கிய பாஜக நிர்வாகி..?

By Thiraviaraj RMFirst Published May 2, 2019, 2:42 PM IST
Highlights

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள ஒயிட்ஃபீல்டு பகுதியில் ஆட்டோ டிரைவரான சுப்பரமணி ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்து தனி பங்களா வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள ஒயிட்ஃபீல்டு பகுதியில் ஆட்டோ டிரைவரான சுப்பரமணி ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்து தனி பங்களா வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வரை சுப்பிரமணி ஆட்டோ ஓட்டி பிழைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அவரிடம் கோடிக்கணக்கான பணம் வந்தது தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து ரொக்கப்பணம் மற்றும் ரூ.7 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

இவ்வளவு சொத்துக்கள் சம்பாதித்தது எப்படி என்பது பற்றி சுப்பிரமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு அறிமுகமான 72 வயது அமெரிக்க பெண்ணின் தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வருவதாகவும், அதன் மூலம் சொத்துக்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சுப்பிரமணியிடம் பங்களாவை விற்றவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். 2013-ம் ஆண்டு சுப்பிரமணி தனது ஆட்டோவில் அமெரிக்க பெண் ஒருவரை அழைத்து வந்து பங்களாவை வாடகைக்காக பார்த்தார். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டோம். அதன்பின் 2015-ம் ஆண்டு பங்களாவை விலைக்கு வாங்க சுப்பிரமணி ஆர்வம் காட்டினார். அவர் தலா ரூ.10 லட்சம் வீதம் 16 செக்குகள் கொடுத்து ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு பங்களாவை வாங்கினார்’’ எனக் கூறியுள்ளனர். 

பங்களாவில் வசிக்க ஆரம்பித்த பிறகு சுப்பிரமணி ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டார். இரவில் கிரிக்கெட் அல்லது பேட் மிட்டன் விளையாடுவது, நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது என்று பொழுதை கழித்து வந்துள்ளார். அவரது மகன், மகள் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணிக்க்யு உள்ளூர் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பாஜக எம்.எல்.ஏவான அரவிந்த் லிம்பாவலிக்கும் சுப்ரமணியின் பங்களாவுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை மறுத்துள்ள் அரவிந்த் லிம்பாவலி, எனக்கும் ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணிக்கும் தொடர்பில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவில் அவர் என்னை சந்தித்தார். அத்துடன் எந்த தொடர்பும் இல்லை. லோக் ஆயுக்தாவில் முறைப்படி எனது வருமானவழிமுறைகளை சமர்ப்பித்து வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!