அடுத்தது யார்??? இன்று மாலை எம்எல்ஏக்கள் கூடி முடிவு செய்வார்கள்

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
அடுத்தது யார்??? இன்று மாலை எம்எல்ஏக்கள் கூடி முடிவு செய்வார்கள்

சுருக்கம்

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதகவல் கிடைத்ததும், அனைத்து எம்.எல்.ஏ.களும் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வர கட்சித்தலைமை உத்தரவிட்டது. 
.இதைத்  தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர் கள் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையின் கீழ் தளத்தில் நடந்தது . இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில்  அ.தி.மு.க. எல்.எல்.ஏ.கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெ உடல்நிலை மோசமாக உள்ளதால் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நிதியமசை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இம்மூவரில் ஒருவர் பொறுப்பு முதல்வர் பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி