
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கோளாறு நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அனுமதிக்கப்பட்ட முதல்வர் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர் வகித்து வந்த இலாகாக்கள் நிதியமைச்சருக்கு மாற்றி அளிக்கப்பட்டு முதல்வர் இலாகா இல்லாத முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சர்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் , பிசியோ தெர்பி சிகிச்சை மூலம் முதல்வர் தற்போது பூரண குணமடைந்துவிட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் ஆகலாம், அதை சுகாதார துறை அமைச்சரோ நானோ முடிவு செய்ய முடியாது அவர்தான் முடிவு செய்வார் என்று அப்போலோ குழும தலைவர் டாக்டர் ரெட்டி சமீபத்தில் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே முதல்வர் பூரண குணமடைந்து விட்டதால் அவர் 29 ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகலாம் இன்று நல்ல நாள் எனபதால் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்று கூறப்பட்டது. அதன் படி இன்று காலை முதலே அப்போலோவில் பரபரப்பு தொற்றிகொண்டது. அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் அப்போலோவில் இன்று அமைச்சர்களை தாண்டி கட்சி நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் , எம்.எல்.ஏக்கள் , எம்பிக்கள் என கூட்டம் அலைமோதியது.
என்றும் இல்லாத சந்தோஷத்துடன் அமைச்சர்கள் அப்போலோவில் சிரித்த முகத்துடன் வலம் வந்தனர். இதனால் முதல்வர் இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் இதுபற்றி அங்குள்ள சில முக்கிய நபர்களை விசாரித்த போது இன்று நிறைந்த நாள் நல்ல நாள் தான் சில வாரங்களுக்கு முன்னர் இன்று டிஸ்சார்ஜ் ஆகத்தான் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் முதல்வர் தற்போது கூடுதலாக நடைப்பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகளும் எடுத்து வருவதால் மருத்துவமனை சூழ்நிலை தான் அதற்கு உகந்தது என்று நினைப்பதாகவும் அதனால் அந்த பயிற்சிகளை முடித்த பின்னரே டிஸ்சார்ஜ்ன்னு நினைக்கிறேன் என்றார்.
அப்படியானால் எப்போது டிஸ்சார்ஜ் என்று கேட்ட போது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சூசகமாக சொன்னார். முதல்வர், ஜனவரி 17 எம்ஜிஆர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்துகொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்துவார் அதற்குத்தான் இந்த பயிற்சி எல்லாம் என்று தெரிவித்தார்.
அதனால் இன்று டிஸ்சார்ஜ் இல்லை எனப்து தெளிவானது.