கச்சத்தீவு அந்தோனியார் கோவில் விழா - அமைச்சர் ஜெயகுமார் உறுதி

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 09:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
கச்சத்தீவு அந்தோனியார் கோவில் விழா - அமைச்சர் ஜெயகுமார் உறுதி

சுருக்கம்

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் புனரமைக்கப்பட்டு டிசம்பர் 7ல்  நடைபெறும்  புதிய   ஆலயதிறப்பு விழாவில்  100 பேர் பங்கேற்பதற்கு வெளியுறவு அமைச்சகத்தில் அனுமதி பெறப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் .

சென்னை தலைமை செயலகத்தில் மீனவ பிரதிநிதிகள், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் செயலாளரை இன்று சந்தித்தனர்.

ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டிற்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும், வங்கிகளில் வாரத்திற்கு அதிகப்பட்சமாக 50ஆயிரம் ரூபாய் வரை பெறுவதற்கு வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கச்சத்தீவு அந்தோணியார் புதிய ஆலயதிறப்பு விழாவில்  100 பேர் பங்கேற்பதற்கான அனுமதி குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!