மக்கள் துன்பத்தை நீக்காவிட்டால் போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

First Published Nov 28, 2016, 6:30 PM IST
Highlights


மத்திய அரசு கொண்டு வந்துள்ள ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் நாடுமுழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுதும் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் இதில் கலந்துகொண்டன. 

தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியான திமுகவும் இன்று போராட்டத்தில் குதித்தது. தமிழகம்ம் உழுதும் நடைஉபெற்ற போராட்டத்தில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கிய மு.க.ஸ்டாலிஉன் கைதானார். தான் கைதானது குறித்து அறிக்கை விட்டுள்ள ஸ்டாலின் பொதுமக்கள் பிரச்சனை தீராவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளார். 

 இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. 

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பொறுப்பற்ற முறையில் செயல்படுத்தி, விவசாயிகள், மீனவர்கள், பூ விற்பவர்கள், காய்கறி வியாபாரம் செய்வோர், சாலையோரங்களில் கடை வைத்திருப்போர், சிறு குறு தொழில் முனைவோர், வணிகர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் என்று அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் கிராமப்புற மக்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ள மத்திய பா.ஜ.க. அரசையும், அதை தட்டிக் கேட்க மறுத்து வரும் அதிமுக அரசையும் கண்டித்து இன்று சென்னை பாரிமுனையில் இந்தியன் வங்கி எதிரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானேன். 

டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறும் முன்னால் மத்திய மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வீட்டு வாடகை கொடுக்கவும், பால் காசு கொடுக்கவும் படும் சிரமங்களை விளக்கி, மத்திய பா.ஜ.க. அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கிராமங்களில் வாழும் 85 கோடி மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்" என்று கூறி, "மக்களுக்கு படும் துன்பத்தைப் போக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

click me!