
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா 70-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் .
அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் உடல் நலம் தேறி அவசர வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.
தற்போது அவருக்கு நிற்பது , நடப்பதற்கான பயிற்சி அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவது குறித்து அவர் தீர்மானிப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 5ம் தேதி ஷஷ்டி திதி அன்றைய தினம் சுப முகூர்த்தம் என்றாலும் ஜெயலலிதா வெள்ளி, அல்லது சனி அதாவது டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10ம் தேதி தசமி அல்லது ஏகாதசி நாளில் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்ப உள்ளதால் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.