
ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பை லோக்கல் சேனல், நேஷனல் சேனல்களின் விவாதம் நடந்ததையடுத்து வெளிநாட்டு ஊடகங்களும் செய்தியை வெளியிட்டுள்ளது. கட்டம் கட்டி பெரிய ஆர்டிக்கில் ஆகவே போட்டுள்ளது.
காலம் கடந்து வந்தாலும், ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பு அவரது ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர். அரசியல் அறிவிப்பால், அவரது ரசிகர்கள் கட்சிக்கு ஆள் பிடிக்க தீயா வேலை செய்து வருகின்றனர்.
ரஜினியின் இந்த அறிவிப்பை தமிழக திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அனுபம் கேர் உள்ளிட்டவர்களும் தங்களது ரசிகர்களுடன் டுவிட்டர் மூலம் பரிமாறி வருகின்றனர்.இந்திய நடிகர்கள் மட்டுமல்ல முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அறிவிப்பு வெளியானதை அடுத்து, உறுப்பினர் சேர்க்கைக்காக வெப்சைட், மொபைல் ஆப் என அதகலமான வேலை பார்த்து வருகின்றனர்.
ரஜினியின் அரசியல் வருகை எப்படி இருக்கும்? என்று லோக்கல் சேனல், நேஷனல் சேனல்களின் விவாதம் என தாறுமாறாக ரேட்டிங்கை ஏற்றிக்கொண்டது. எந்த சேனலை திருப்பினாலும் ரஜினியின் பாடல், வசனம் படம், நியுஸ் சேனல் பக்கம் போனால் காரசாரமான விவாதம் நாள் முழுக்க இதே பேச்சாக இருந்தது.
சரி இது இருக்கட்டும் ரஜினி இந்தியாவில் அக்கட்சி ஆரம்பிக்கிறார், அதுவும் தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் அறிவிக்கிறார். இந்திய சேனல் ஓகே... ஜப்பான் மற்றும் சீனாவில் கூட ரஜினியின் அரசியல் என்ட்ரியை கவர் செய்துள்ளது. ஜப்பான், சீனாவின் நம்பர் ஒன் சேனல்களான ஜப்பான் டைம்ஸ், ஜின்ஹுவா ஆகியவை ரஜினி தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.