ரஜினிக்கு வந்த முதல் வாழ்த்து செய்தி! யார் அனுப்பினார் தெரியுமா?

 
Published : Jan 02, 2018, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ரஜினிக்கு  வந்த முதல் வாழ்த்து செய்தி! யார் அனுப்பினார் தெரியுமா?

சுருக்கம்

Pres Rajapaksa s favorite actors superstarrajini is going into politics. Great news

பல ஆண்டுகளாக ரசிகர்களிடம் இதோ வரேன் அதோ வரேன் என இழுத்துக்கொண்டே போன ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று  அறிவித்ததால் அவரது ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

ரஜினியின் இந்த அறிவிப்பை தமிழக திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அனுபம் கேர் உள்ளிட்டவர்களும் தங்களது ரசிகர்களுடன் டுவிட்டர் மூலம் பரிமாறி வருகின்றனர்.



இந்நிலையில், முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வாழ்த்தி வரவேற்றுள்ளார்.

’எனது தந்தை ராஜபக்சேவின் பிரியத்துக்குரிய நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு செல்கிறார். உயர்வான செய்தி. இந்த விவகாரத்தில் சினிமாவைப் போல் நிஜவாழ்க்கை ஆகிவிட கூடாது என நம்புகிறேன்.

மேலும், (சிவாஜி படத்தில் வருவதுபோல்) நல்லது செய்வதற்காக அவர் சிறைக்கு போவதை பார்க்க விரும்பவில்லை. அரசியலுக்கு வருக என வரவேற்கிறேன்’ என தனது டுவிட்டர் செய்தியில் நமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!