"திமுக நடத்திய ரயில் மறியல் மாணவர் போராட்டத்தை திசை திருப்பியது" - சட்டசபையில் செங்கோட்டையன் தாக்கு

 
Published : Jan 27, 2017, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
"திமுக நடத்திய ரயில் மறியல் மாணவர் போராட்டத்தை திசை திருப்பியது" - சட்டசபையில் செங்கோட்டையன் தாக்கு

சுருக்கம்

அமைதியாக உலகம் போற்றும் வண்ணம் லட்சக்கணக்கில் போராடி கொண்டிருந்த மாணவர்கள் போராட்டத்தில் திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டம் காரணமாக போராட்டம் திசை மாறியது என்று சட்டசபையில் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.

இதுபற்றி சட்டசபையில் செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போராட்டத்தை உலகமே போற்றும் வகையில் அமைதியாக போராடிய நேரத்தில் நம்முடைய கலாச்சார பண்பாட்டு வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நம்முடைய அரசு சட்டம் இயற்றி தமிழ் நாட்டின் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுள்ளது. 

இந்த அரசு. சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் மாணவர்கள் அமைதியாக கோரிக்கையை எடுத்து வைத்து போராட்டம் நடத்தினர். பல லட்சம் பேர் கூடும் இடத்தில் அமைதி இருக்குமா அனைவரும் எதிர்ப்பார்த்த ஆனால் அமைதியாக உலகமே போற்றும் வகையில் போராட்டம் நடந்தது. 

எதிர்கட்சி எதிர்கட்சியாக இருந்துவிட கூடாது, ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து செயல்படலாம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்  , ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டீர்கள். அமைதியாக சென்ற மாணவர் போராட்டத்தில் அமைதி குலைந்தது. இவ்வாறு செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு