மோடியை புகழ்ந்து தன்னை தாழ்த்திக் கொண்ட ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ்.. பிரதமருக்கு புகழாரம்..!

Published : Mar 30, 2021, 02:07 PM IST
மோடியை புகழ்ந்து தன்னை தாழ்த்திக் கொண்ட ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ்.. பிரதமருக்கு புகழாரம்..!

சுருக்கம்

ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான்; அவர் தான் தடையை நீக்கினார் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்வது பற்றி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். 

ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான்; அவர் தான் தடையை நீக்கினார் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்வது பற்றி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். 

மோடியை வரவேற்று பேசிய ஓ.பி.எஸ்., ‘’இந்தியாவை வல்லரசுக்கெல்லாம் வல்லரசாக மாற்றிய பிரதமர் மோடி அவர்களே! எல்லா வல்லமையும் பெற்ற அண்ணன் முருகன் அவர்களே! தமிழகத்தை பொறுத்த வரையில் நிஜ ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான். என வரவேற்றார் அடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி; நாட்டுக்கு நன்மை செய்யக் கூடிய கூட்டணி. நாட்டின் உயர்வுக்காக ஒருநிமிடத்தை கூட வீணாக்காமல் பாடுபட்டு வருகிறவர் பிரதமர் மோடி.

தமிழகத்துக்கு தேவையான திட்டங்களையும் நிதியையும் கேட்கும் பொழுதெல்லாம் தாராளமாய் தருகின்ற அரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விளங்குகிறது. நல்ல கட்சிகள் இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டின் சாதனை . கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது பிரதமரின் ஆலோசனை பெற்று அதிமுக அரசு  செயல்பட்டதன் விளைவாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி கட்சியினர் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். 1125 கோடி ரூபாயில் திருப்பூர் நகராட்சிக்கு  கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது பாதாள சாக்கடை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதற்கான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

கல்விக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து கல்வியில் புரட்சி செய்யப்பட்டுள்ளது உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை  நூற்றுக்கு 43 பேருக்கு என்ற நிலை வந்துள்ளது. திருமண உதவி திட்டம் இதுவரை  12 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.


 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!