நேர்மைக்கு ஓட்டு கிடைக்கும் என்றால் அந்த பட்டியலில் நிச்சயம் எங்கள் பெயர் இருக்கும்.. அடித்து தூக்கும் கமல்.

Published : Mar 30, 2021, 01:30 PM IST
நேர்மைக்கு ஓட்டு கிடைக்கும் என்றால் அந்த பட்டியலில் நிச்சயம் எங்கள் பெயர் இருக்கும்.. அடித்து தூக்கும் கமல்.

சுருக்கம்

புதிய திட்டங்களை வகுக்கும் கட்சியை நம்புங்கள். இலவசங்களை ஒருபோதும் நம்பாதீர்கள். நான் போட்டியிடும் தொகுதியில் உள்ள 19 வார்டிலும் 19 மக்கள் நீதி மய்யதின் அலுவலகம் உள்ளது. 

நேர்மைக்கு ஓட்டு கிடைக்கும் என்றால் நிச்சயம் எங்கள் பெயர் அந்த பட்டியலில் இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கவிஞர் சினேகன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், 

நேர்மை நேர்மை என்று பலர் இங்கு சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் ஆனால் உண்மையில் நேர்மை என்பது மக்களாகிய நீங்கள் தான். பிரதமர் புதுச்சேரி வருவதால் அங்கு 144தடை போடபட்டுள்ளது. ஒருவர் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு ஊரையே அடைத்துவைத்துள்ளார்கள். ஆகாய வழியில் யாரும் வரக்கூடாது என்று தெளிவாக எழுதியுள்ளார்கள். எங்கள் கூட்டத்தை தடுப்புகள் போட்டு தடுக்க பார்கிறார்கள். அதை தாண்டி நின்றது எங்கள் கூட்டம். தமிழகம் முழுவதும் சுற்றி பார்த்து விட்டேன்,  ஏழைகளை ஏழைகளாகவே வைத்துள்ளார்கள். 

இலவசம் ஏழ்மையை போக்காது. புதிய திட்டங்களை வகுக்கும் கட்சியை நம்புங்கள். இலவசங்களை ஒருபோதும் நம்பாதீர்கள். நான் போட்டியிடும் தொகுதியில் உள்ள 19 வார்டிலும் 19 மக்கள் நீதி மய்யதின் அலுவலகம் உள்ளது. அதில் மக்களின் குறைகளை கேட்கிறோம். அவர்களுக்காக செவி கொடுக்கிறோம். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இப்படியாக இயங்கவில்லை. முதல் தலைமுறை வேட்பாளர்கள் நேர்மைக்கு வாக்கு செலுத்த வேண்டும் என நினைத்து வாக்களிக்க வேண்டும். நேர்மைக்கு ஒட்டு கிடைக்கும் என்றால் நிச்சயம் எங்கள் பெயர் அந்த பட்டியலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.  

PREV
click me!

Recommended Stories

Archana Kalpathi: திரிஷாவின் நெருங்கிய தோழிக்கு அரசுப் பதவி.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக அரசு.!
CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?