ஜெய்ஹிந்த்.. ஜெய் தமிழ்நாடு.. தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் நிகழ்த்திய உரை..!

Published : Jul 12, 2021, 09:14 PM IST
ஜெய்ஹிந்த்.. ஜெய் தமிழ்நாடு.. தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் நிகழ்த்திய உரை..!

சுருக்கம்

ஜெய்ஹிந்த் விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில். தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  ‘ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ எனக் கூறினார்.  

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் தனியார் மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பன்வாரிலால் புரோஹித், “கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இறுதியில் தனது உரையை முடிக்கும் போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கடந்த மாதம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் பேசிய திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன், “கடந்த முறை ஆளுநர் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று போட்டிருந்தது. ஆனால், இந்த உரையில், ஜெய்ஹிந்த என்ற அந்த வார்த்தை இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஈஸ்வரனின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில்,  தனியார் நிகழ்ச்சியில் ‘ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் தமிழ்நாடு’ என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றது.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்