ஜெய்ஹிந்த் விவகாரம் பற்றி பொதுவெளியில் விவாதிக்க முடியாது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Jul 5, 2021, 9:16 PM IST
Highlights

ஜெய்ஹிந்த் விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்க இயலாது என தமிழக  சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டட்தில் முதல்வர், சட்டப்பேரவை துணை தலைவர் ஆகியோர்  பங்கேற்றனர். சட்டப்பேரவையில் காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்காக அனைவருக்கும் விசைப்பலகை இணைப்புடன் கையடக்க கணினி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். படிப்படியாகதான் இ-பட்ஜெட்  நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி உறுப்பினர் கற்றுகொள்ளும் வரை இரண்டு நடைமுறைகளும் தொடரும்.” என்று அப்பாவு தெரிவித்தார்.
அப்போது ஜெய்ஹிந்து விவகாரம் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிஅளித்த அப்பாவு, “அதுதொடர்பாக பொதுவெளியில் விவாதிக்க இயலாது” என்று தெரிவித்தார்.

 

click me!