Jai Bhim: இப்படியே தமிழ் கலாசாரம், பண்பாட்டை குறி வைச்சு தாக்குவீங்களா.? சூர்யாவைப் போட்டுத் தாக்கும் பாஜக.!

By Asianet TamilFirst Published Nov 18, 2021, 10:01 AM IST
Highlights

கொலையான ராஜாக்கண்ணு முதல் விசாரணை அதிகாரி வரை சம்பவத்தில் வந்த உண்மை பெயர்களைச் சூட்டிவிட்டு,  குற்றம் இழைத்த சப் இன்ஸ்பெக்டர் சிறுபான்மையினர் என்பதால் அந்தக் கதாபாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாறாக பெயரை மாற்றியது ஏன்?

அண்மை காலமாகவே சூர்யா குடும்பத்தில் சிலர், தமிழக கலாசாரம், பண்பாடு, வழிபாட்டை சித்தரிக்கிறார்கள் என்று தமிழக பாஜக விவசாய பிரிவு மா நிலத் தலைவர் நாகராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

'ஜெய்பீம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்துவிட்டது. கடலூரில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து சர்ச்சைகள் உருவாகிவிட்டன. படத்தில் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றத்தை நிகழ்த்தும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருக்கும் அக்னி கலச காலாண்டரும் சர்ச்சைக்கு வித்திவிட்டுவிட்டது.

உண்மை சம்பவத்தில் அந்தோணிசாமி என்ற துணை ஆய்வாளர்தான் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டார். ஆனால், ரீல் கதையும் குருமூர்த்தி என்று அவர் பெயர் மாற்றப்பட்டதை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு தமிழக பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஜெய்பீம் படத்தில் காவல் துறையினரால் ஒரு பழங்குடி குடும்பம் பாதிக்கப்பட்ட துயரத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட அப்படத்தில் அக்காலகட்டத்தைக் காட்டுவதற்காக வாகனப்பதிவு எண் முதல் சாலையோர சுவர்களில்  திரைப்பட போஸ்டர், காலாண்டர் என பலவற்றையும் காட்டியுள்ளனர்.

கொலையான ராஜாக்கண்ணு முதல் விசாரணை அதிகாரி வரை சம்பவத்தில் வந்த உண்மை பெயர்களைச் சூட்டிவிட்டு,  குற்றம் இழைத்த சப் இன்ஸ்பெக்டர் சிறுபான்மையினர் என்பதால் அந்தக் கதாபாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாறாக பெயரை மாற்றியது ஏன்? இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸின் ஆதங்கத்தில் உண்மை இருக்கிறது. அண்மை காலமாகவே அவர் (சூர்யா) குடும்பத்தில் சிலர், தமிழக கலாசாரம், பண்பாடு, வழிபாட்டை சித்தரிக்கும் விதம் நடந்துக்கொள்வது, பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடையது அல்ல.

எதிர்மறையாக சித்தரிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் உள்ள காலண்டரில் இடம் பெற்ற படமும், நீதிமன்றத்தில் ஒரு கதாபாத்திரம் அடிக்கடி உச்சரிக்கும் சமயம் சார்ந்த சொல்லும், அவர்களையெல்லாம் எதிர்மறை சக்திகளாகக் காட்ட திட்டமிட்டே புகுத்தியுள்ளார்கள். படைப்பு சுதந்திரம் பெயரில் பெரும்பான்மை மக்களின் கலாசாரம், பண்பாட்டை குறிவைத்து தாக்குகிறார்கள். அவர்கள் எதிர்மறையாக சித்திரிக்கும் திரைபடங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே உள்ளது. அன்புமணி எழுப்பிய 9 கேள்விகளுக்கு சூர்யா அளித்த பதிலும் ஏற்புடையது அல்ல” என்று நாகராஜ் தெரிவித்துள்ளார்.

click me!