#BREAKING திமுகவில் 2 கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.. வேகம் காட்டும் ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published Mar 1, 2021, 6:59 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

நேற்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்.எஸ்.பாரதி, ஐ. பெரியசாமி, பொன்முடி குழுவினர் நேற்று மாலை காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும்,  மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில்  ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா ஆகியோர்  தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்;- திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவிடம் 5 தொகுகதிகள் கேட்ட நிலையில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் என காதர் மொய்தீன் கூறியுள்ளார். 

click me!